Anbil Mahesh Latest News | முன்கூட்டியே வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை
Anbil Mahesh Latest News
விதிகளை மீறி முன்கூட்டியே வகுப்புகளை தொடங்கும் தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியாக நடவடிக்ைக எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி அரசு மற்றும் தனியார் ப்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கில் செயல்படும் சில தனியார் பள்ளிகள் அரசின் அறிவிப்புக்கு மாறாக, வியாழக்கிழமை (ஜூன் 1) வகுப்புகளை தொடங்கின. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளிகளை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மாணவர்களை திருப்பி அனுப்பியதாகவும், மீண்டும் பள்ளிகள் 7ம் தேதி திறக்கப்படும் என்று பெற்றோரிடம் தெரிவித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோடைவிடுமுறை முடிந்து ஜூன் 7ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக பள்ளிகளை திறந்தால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.