அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
34.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

Anbil Mahesh latest News | பள்ளி கல்வி அமைச்சர் பெயரை பயன்படுத்தி லட்சகணக்கில் மோசடியா?

Anbil Mahesh latest News | பள்ளி கல்வி அமைச்சர் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடியா?

Anbil Mahesh latest News

தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்ட இவர்கள், கடந்த சில வருடங்களாக, தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும், திமுக ஆட்சிக்கு வந்தால், இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் அள்ளி வீசியது. தற்போது வரை, இந்த வாக்குறுதி மீது எவ்வித நடவடிக்கை எடுக்கததால், பல பகுதி நேர ஆசிரியர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

Read Also: பகுதிநேர பயிற்றுநர்களுக்கு முக்கிய அறிவுரை

இதற்கிடையில் பகுதிநேர ஆசிரியர்களாக இருக்கும் ஆறுபேர் கொண்ட குழுவினர், பணி நிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாநாடு நடத்தப்போவதாகவும், அதில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்கபோவதாகவும், இதனால் பணி நிரந்தரம் செய்யு வாய்ப்புள்ளதாகவும் கூறி தமிழகம் முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியர்களிடம், பணம் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வசூல்வேட்டை ரசீது ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், பணி நியமன உத்தரவை மேற்கொள்காட்டி, பகுதி நேர ஆசிரியர் பணி ஒரு தற்காலிக பணி, அவர்கள் சங்கம் நடத்த அனுமதி கிடையாது என்று பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். மேலும், சொற்ப சம்பளம் ரூ.10 ஆயிரம் பெறும் பகுதி நேர ஆசிரியர்களிடம் பண மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புதுறையினர், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது. விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற செயல், அரசுக்கு அவபெயர் ஏற்படுத்துவதுபோல் உள்ளது என்று ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

(சோர்ஸ், தந்தி டிவி)

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts