காழ்ப்புணர்ச்சி காரணமாக சக ஆசிரியா்களை வீடியோ எடுத்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதை கெட்ட பெயரை ஏற்படுத்தும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் காட்டமாக பேசினார்.
அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. அதில் பங்ேகற்று அன்பில் மகேஸ் பேசியதாவது, ஆசிரியர்கள் தனிப்பட்ட பிரச்னை, காழ்ப்புணர்ச்சி காரணமாக சக ஆசிரியர்களை அவர்களுக்கு தெரியாமல், வீடியோ எடுத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்கின்றனர். உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி, பள்ளி கல்வித்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். சுய விருப்பு, வெறுப்புக்காக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவது கண்டிக்கதக்கது. எதிர்மறை வீடியோ பதிவுகளை பார்க்கும் மாணவர்களும், பாதிப்புக்கு ஆளாகின்றனர். தனிப்பட்ட வெறுப்பை பள்ளி வளாகத்துக்கு வெளியே போய் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் கல்வித்துறை அவப்பெயரை ஏற்படுத்தும், தற்காலிக ஆசிரியா்களிடம் பாரபட்சம் காட்டாமல், அவர்களை ஊக்குவித்து கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும். தங்களை சுயபரிசோதனை செய்து, அடுத்தகட்ட நிலைக்கு ேமம்படுத்திக்கொள்வது, அவசியம், இவ்வாறு அவர் பேசினார்.