Ambedkar award in Tamil | அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
Ambedkar award in Tamil
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சாா்ந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் வாழ்க்கைதரம் உயரவும் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
Read Also: Social Service Award in Tamil
அவ்வகையில், 2023ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று, அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்பும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சே்ா்ந்த www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து இவ்விருதுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் அல்லது ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றும், தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அறை எண் 26ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.