கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகுந்த 100க்கும் மேற்பட்டோர், முதன்மை கல்வி அலுவலர் சூழ்ந்து முதன்மை கல்வி அலுவலரை உஷாவை மிரட்டியதால், கல்வி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் அவர்கள், கல்வி அலுவலரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இதுகுறித்து கல்வி அலுவலர் உஷா போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் சிங்காநல்லூரில் உள்ள ஒரு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது பள்ளி கட்டணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்தது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது தனி அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாதுஎன பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் வந்து என்னிடம் வாக்குவாதம் செய்து மிரட்டினர். இதனால், அலுவலகத்திற்கும், ஊழியர்களுக்கும், எனக்கும் பாதுகாப்பு வேண்டும், என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் காரணமாக முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கபட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்க்கு அனுப்பப்பட்டிருந்தது. Read, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.