அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளி கல்வி இயக்குனர் பேசியதாவது, அரசு பள்ளிகள், மாநில உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த கணினி அறிவியல் மற்றும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தயராக உள்ளது. Read Also: artificial intelligence course details in tamilஇந்த பாடத்திட்ட மாற்றம், தகவல தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு செய்யப்பட்டு, 15 நாட்களில் முடிவடையும். பள்ளி கல்வியை நவீனப்படுத்த, தமிழக அரசு 6029 மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைத்து வருகிறது. அரசு உதவிபெறும் 500 பள்ளிகளிலும், மூன்று மாதங்களில் 56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 8000 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் 10 கணினிகளுடன் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் இம்மாதத்திற்கள் அமைக்கப்பட்டு விடும். மேலும் 2,291 ஆரம்ப பள்ளிகளில் ஸ்மாாட் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பயன்பட்டில் பயிற்சி அளிப்பது பெரிய சவாலாகும். இதற்காக, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உதவ முன்வர வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.