கெல்ட்ரான் எனப்படும் கேரள மாநில அரசு அரசு பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களில் இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பிரச்னை சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பிரச்னை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, ஆய்வக பயிற்றுநா் நிர்வாகிகள் கூறும்போது, சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்கள் கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான் மூலம் பணியமர்த்தப்பட்டர். குறிப்பாக, மாதம ஊதியமாக சுமார் ரூ11500 நிர்ணயம் செய்யப்பட்டு, பிடித்தம் போக, மாதம் ரூ 9,700 பெறுகின்றனர். மேலும், பணி நியமன ஆணையின் படி, இவர்களுக்கு மாதம் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.ஆனால், மாதம் சம்பளம் 15ம் தேதிக்குள் மேல் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து பயிற்றுநர்கள் கேட்டால், முறையான பதில் அளிக்காமல், தரக்குறைவாக நடத்துகிறார்கள். இந்த நிலையில், ஒரு சிலரை தவிர, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான பயிற்றுநர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும், எப்போது ஊதியம் வழங்கப்படும் அதிகாரிகள் தெரிவிக்காததால், பல பயிற்றுநர்கள் தங்களது கடன், வீட்டு செலவு நிர்வகிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர், இவ்வாறு அவர்கள் கூறினர்.