Accidental Finance Assistance School Students in Tamil| பள்ளி மாணவர்கள் விபத்து நிதியுதவி
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு விபத்தில் ஏற்படும் மரணம், பலத்த காயம் மற்றும் சிறு காயங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து பலரும் அறிய வாய்ப்பில்லை. அந்த வகையில் இந்த தொகுப்பில் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுவது, எவ்வாறு நிதியுதவி பெறுவது என்பதை குறித்து விரிவாக காணலாம்.
பள்ளி கல்வித்துறையின் அரசாணை எண் 17ன்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்பாராத விபத்துகளினால் இறப்பு ஏற்பட்டாலோ அல்லது பலத்த காயங்கள் நிகழ்தாலோ பாதிப்பு அடையும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
Also Read: TN Cradle Baby Scheme in Tamil| தொட்டில் குழந்தை திட்டம்
விபத்து நிதியுதவி எவ்வளவு?
- விபத்தில் மரணமடைந்த மாணவர்களுக்கு ரூ.1,00,000 (ஓரு லட்சம்) வழங்கப்படும்.
- விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.50,000 (ஐம்பது ஆயிரம்) வழங்கப்படும்.
- விபத்தில் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 (இருபத்தைந்தாயிரம்) வழங்கப்படும்.
விபத்து நிதியுதவி எதன் அடிப்படையில் வழங்கப்படும்

- விபத்த நிதியுதவி பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, பள்ளியிலிருந்து சுற்றுலா செல்லும்போது உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகிறது. அதனை விரிவாக காணலாம்.
- மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும்போது ஏற்படும் விபத்து
- கல்விச்சுற்றுலா செல்லும்போது ஏற்படும் விபத்து
- நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், பாரத சாரண, சாரணியர் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக நடைபெறும் முகாம் மற்றும் பேரணிகளில் கலந்துகொள்ளும்போது ஏற்படும் விபத்து
- விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும்போது விபத்து
- மின்கசிவு மற்றும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து
- விஷ ஜந்துகளினால் ஏற்படும் விபத்து
- மாணவரின் விடுமுறை நாட்களில் வெளியே செல்லும்போது, நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து
- இணைக்கப்பட வேண்டிய நகல்கள் என்னெ்ன?
- பெற்றோர், பாதுகாவலரின் விண்ணப்பம்
- மாணவ, மாணவியர்கள் சார்பான விவர படிவம் (தலைமை ஆசிரியர் மூலமாக)
- தலைமையாசிரியர் பரிந்துரை கடிதம்
- முதல் தகவல் அறிக்கை நகல்
- இறப்பு சான்று
- வாரிசு சான்று
- மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை நகல்
- பலத்த அல்லது சிறிய காயம் அடைவதற்கு முன்பான மாணவரின் முழு புகைப்படம்
- மருத்துவரின் சான்று
- மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம்
- மாணவர்களின் புகைப்படங்கள் உள்ள ஆவணங்களில் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவரின் புகைபடம் பள்ளி சீருடையில் இருக்க வேண்டும். படிப்பு சான்றில் சம்மந்தப்பட்ட மாணவரின் புகைப்படம் ஒட்டப்பெற்று தலைமை ஆசிரியரால் கையொப்பம் இட வேண்டும். (மாணவர் இறந்திருப்பின், இந்த நிபந்தனை பொருந்தாது)
- ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் கருத்துருவினை தனிதனியாக தயார் செய்து அளிக்க வேண்டும்.
தொடர்பு கொள்வது எப்படி?
இதுதான் விபத்து நிதியுதவி பெறும் வழிமுறைகள். உங்களுக்கு மேலதிக சந்தேகம் இருந்தால், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரோ அல்லது மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஆனால், நடைமுைறயில் இதுபோன்ற திட்டம் உள்ளதா என்று பலருக்கும் தெரியாது, குறிப்பாக எளியவர்கள் மத்தியில் இன்னும் சென்று சேரவில்லை. இதுபோன்ற திட்டங்கள் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின்போது, இந்த திட்டத்தை விவரித்து, அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து, அதே சமயத்தில் மாணவர்கள் விபத்து நிதியுதவி குறித்து எடுத்துரைக்கப்பட வேண்டும்.
Comments are closed.