நான்கு மாவட்ட கல்லூரிகள் இணைக்க முடிவு:
அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் நான்கு மாவட்ட கல்லூரிகள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல்
கடந்த ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், நிதியும் ஒதுக்கப்படவில்லை, பணியிடங்கள் நிரப்பப்படவில்லை
தனி பல்கலைக்கழகமாக செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழத்தை கூட்டு பல்கலைக்கழகமாக மாற்றி அதனுடன் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை இணைப்பு கல்லூரிகளாக சேர்க்க முடிவு - அமைச்சர் பொன்முடி
ஏற்பாடுகள் நடந்து வருகிறது, இதனால் நிதிசுமை குறையும் – அமைச்சர் பொன்முடி
14 துறைக்கான தேர்வு முடிவு வெளியீடு:
அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 14 முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை நடத்தப்பட்ட டிசம்பர் 2020க்கான துறை தேர்வுகளில், தேர்வு முடிவு அறிவிக்கப்படாமல் இருந்த எஞ்சியுள்ள 14 தேர்வர்களுக்கான முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2ம், 3ம் நிலை மொழிகளுக்கான வாய்மொழி தேர்வு முடிவுகள் வரும் 28ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மே 2021 துறை தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் வரும் 31ம் தேதி.
பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு:
பிளஸ் 2 பொது வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் ேததி வெளியான நிலையில், பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு, பகுதிநேர படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நிட்டிக்கப்பட்டுள்ளது.
இறுதி நாள் பின்னர் அறிவிக்கப்படும் - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு
அரசு, அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளில் ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொழில் கல்வி படிப்பு - அறிக்கை சமர்ப்பிப்பு:
தொழில் கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம், தனது அறிக்கையை முதல்வரிடம் நேற்று வழங்கப்பட்டது.
கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வி பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்ககை குறைந்ததை தொடந்து, ஆணையம் அமைக்கப்பட்டு, அறிக்கை சமர்ப்பிப்பு.
மருத்துவ கல்வி போல், இதர தொழில் கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிிக்கப்பட வேண்டம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆவினுக்கு மீண்டும் ஆட்கள் தேர்வு:
ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டது. கண்டறியப்பட்டு அவை ரத்து செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஆவடி நாசர்
அந்த பணயிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் நாசர்
3 ஆண்டுகளில் தமிழகம் கல்வியறிவில் 100 சதவீதம் எட்டும்:
எழுத்தறிவித்தல் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் கல்வியறிவில் 100 சதவீதம் எட்டும் - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
கிராமங்களில் படிக்க, எழுத தெரியாவதர்களுக்கு, கையெழுத்து போட கற்பித்தல் பணி நடக்கிறது.
தற்போது கல்வியறிவில் தமிழகம் 81 சதவீதமாக உள்ளது மற்றும் தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு கையெழுத்து போட தெரியாது.
ஆசிரியர்களுக்கு விரைவில் பணிமாறுத்ல கலந்தாய்வு நடத்தப்படும்
ஒரு வரி செய்திகள் :
கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். தாய்மொழியில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி புத்தகங்களை அச்சிட்டு விரைவில் வழங்கப்படும் – திண்டுக்கல் ஐ லியோனி.
சிவகங்கை அரசு ஐடிஐ.யில் சேர 28ம் தேதி கடைசி நாள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் 23 பேர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உயர்வில் குளறுபடி எனவும், துணைவேந்தர் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக செயல்படுவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், வங்கிகள் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.