ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 9 மற்றும் 10ம் வகுப்பில் 55க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 11 ஆசிரியர் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில், பள்ளியில் கடந்த 6ம் தேதி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிைலயில் கடந்த 16ம் தேதி ஆவடி சின்னமன் கோயில் தெருவில் வசிக்கும் ஆசிரியைக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதால், பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்துள்ளார். அத்துடன் அவர் கொரோனா பரிசோதனையும் செய்துகொண்டார். இதன் முடிவு நேற்று முன்தினம் வந்தது. அதில் ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானருத. இதனால் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு கொரோனா பாிசோதனை செய்தனர். தொடர்ந்து ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.