மருத்துவ படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஐகோாட்டில் பல வழக்குகளில் தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்களில் மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டு, அந்த இடங்களில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு, அவற்றுக்கான கலந்தாய்வு நடந்துவருகிறது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடந்து வரும் நிலையில், பொது நலன் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கபட்டுள்ளது. உத்தரமேரூர் அடுத்த கூட்டுரோடு பகுதியில் வசிப்பவர் மரியபாஸ்டினா அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், நேற்று மதியம் அவர் வீடு திரும்பிய நிலையில் கதவின் பூட்டு உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் மர்மநபர்கள் வீட்டில் உள்ள 5 சவரன் நகை, பைக் உள்ளிட்டவை திருடிச் சென்றனர், புகாரின் பேரில், பெருநகர் போலீசார் விசாரிக்கின்றனர். அரசு கல்லூாிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தகுதி பெற்று கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமையில், ராமநாதபுரம் வந்த முதலமைச்சரிடம் மனு அளித்தனர். தேனி வெங்டசாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் வகுப்பறைகள் நுழைந்தபோது, இரண்டு சாரை பாம்புகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். பின்னர், பாம்புபிடி வீரர் கண்ணன் வரவழைக்கப்பட்டு, 9 அடி மற்றும் 7 அடி நீளமுள்ள பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது. டெண்டர் மோசடி விவகாரத்தில் கோவை ஜி.சி.டி கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு கல்லூரிக்கு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்படும் நிதியில், கல்லூரி பணியில் அலுவலர்களே பினாமி பெயரில் போலி நிறுவனங்கள் உருவாக்கி, டெண்டர்களில் மறைமுகமாக பங்கேற்று, ஆர்டர் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் மூன்றாம் பருவ பாடப்புத்தகம் பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. சமுதாய வானொலியில் ஒலிபரப்ப பாடங்கள் தயாரிக்கும் பயிற்சி உடுமலையில் நேற்று துவங்கியது. கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், சமுதாய வானொலி மூலமாகவும் பாடங்கள் நடத்துவதற்காக திருமூர்த்தி மலையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனம் சார்பில் பாடங்கள் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருகிறது. 4,7,10ம் வகுப்பு ஏற்கனவே, ஒலிபரப்பு செய்யப்பட்ட நிலயைில், தற்போது 160 ஒலிப்பாடங்கள் 10ம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு தயாரிக்கப்பட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 12ம் வகுப்பு பாடங்களுக்கு தயாரிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 20 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஇஓ அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடக்கும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளார். சேலம் அருகே ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வரும் நிதியை சொந்த பணமாக நினைக்கிறார்கள் என்று தனமு முகபுத்தகத்தில் வேதனை தெரிவித்தது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் கல்வித்துறையில் ஊழல் நடந்துவருதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கே.சி வீரமணி 15 பள்ளிகளை சேர்ந்த 2,164 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிளை வழங்கினார். பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி நாகர்கோவில் ஒழுகின சேரி என்.எஸ்.கே அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது. ead, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.