மருத்துவ படிப்பில் மட்டுமில்லை, முதல் தர பொறியியல் கல்லூரிகளிலும் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வெகு குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது. குறிப்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் புள்ளி விவரத்தின்படி 5 சதவீதத்திற்கு கீழே அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள நான்கு கல்லூரிகளில் படிக்கின்றனர்.
குறிப்பாக 2018-19ம் கல்வியாண்டில் நடந்த, பிஇ, பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 3,040 இடங்களில் வெறும் 148 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. அதேபோல் 2017-18ம் கல்வியாண்டில் கூட, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் மதிப்புகு கல்லூரிகளான College of Engineering, Guindy (CEG), Madras Institute of Technology (MIT), Chromepet Alagappa College of Technology (AC tech) and School of Architecture and Planning (SAP) வெறும் 5 சதவீதத்திற்கு சற்று மேலாக உள்ளது. மார்ச் 2017, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,181 மதிப்பெண்கள் மேல் 1,049 மாணவர்கள் எடுத்துள்ளனர், இதில் 5 பேர் நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்கள். 10,610 மாணவர்கள் 1,151 முதல் 1,180 மதிப்பெண் பெற்றதில், 299 அரசு பள்ளி மாணவர்கள். ஒரு சமூக அமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சங்கர் கூறும்போது, பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலோனர் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். கல்வி கடனும் கூட வங்கிகளில் பெற முடிவதில்லை. தனியார் கல்லூரியிடன் ஒப்பிடும்போது, கல்வி மற்றும் விடுதி கட்டணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைவாக உள்ளது. கோவிட் – 19 காரணமாக, மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பதாகவும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, மாநில அரசின் தவறான கொள்கை முடிவும், அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியரின் காலிபணியிடங்கள் மாணவர்களின் கல்வி செயல்பாடு பொதுத்தேர்வில் மோசமாக இருப்பதற்கு முக்கிய பங்கு வகுக்கிறது. குறிப்பாக, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பது அரசின் முடிவாக வைத்திருந்தது. இதனால், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். பல அரசு பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக இல்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பொது தேர்வில் எடுக்க முடிவதில்லை. இந்த இரு பிரச்னைகள் சரி செய்தால், நீண்ட காலத்திற்கான தீர்வாக இருக்கும், இவ்வாறு அவர் கூறினார்.