அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாட்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,553 அரசு பள்ளிகள் செயல்படுகிறது. சுமார் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனா், மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதியே தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேர்க்கை தொடங்கி இதுவரை 41,931 மாணர்வர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. ஆனால், கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாட்களில் 80 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டனர். நடப்பாண்டு சேர்க்கை சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.