அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வாய்ப்பு அளிக்கும் வகையில் 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும், என்ற திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீட்பு குழு மாநில செயலர் கனகராஜ் கூறியதாவது, தமிழகத்தில் அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்களில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். இவற்றை ஆட்சிக்கு வந்ததும் தீர்ப்பதாக கூறிய திமுக தற்போது கண்டுகொள்ளவில்லை. முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக்கி, அதன் உள்ஒதுக்கீடாக 2.5 சதவீதத்தை அரசு உதவிெபறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்ததும், திமுக மறந்துவிட்டது, இவ்வாறு அவர் கூறினார்.