121 children rescue | 121 குழந்தைகள் மீட்பு
121 children rescue
தமிழகத்தில் மூன்று நாட்களில் காணாமல்போன 121 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை டிஜிபி அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு
மாநிலம் முழுவதும் காணாமல்போன குழந்தைகளை மீட்கும் சிறப்பு நடவடிக்கையாக கடந்த 7ம் தேதி முதல் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த மாநகர காவல்துறை மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Read Also: தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு, டெட் ஆசிரியர்கள் அதிருப்தி
இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் இதுவரை 24 ஆண் குழந்தைகள், 97 பெண் குழந்தைகள் என மொத்தம் 121 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.