You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பிளஸ்2 துணைத்தேர்வு 2022 ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் dge.tn.gov.in

Typing exam apply Tamil 2023

பிளஸ்2 துணைத்தேர்வு 2022 ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் dge.tn.gov.in

பிளஸ்2 துணைத்தேர்வு 2022 ஹால்டிக்கெட்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள ஜூலை/ஆகஸ்ட் 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 20.7.2022 பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 2 துணைத்தேர்வு எப்படி ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

தனித்தேர்வர்கள், www.deg.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் Hall Ticket என்ற வாசகத்தினை கிளிக் செய்ததால், தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JULY / AUGUST 2022 - HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் விண்ணப்ப எண் (Application Number) என்ற நிரந்தர பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்து அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள்.

Also Read: TN 10th 12th supplementary exam Timetable PDF 2022

ஜூலை /ஆகஸ்ட் 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்விற்கான தேர்வுகால அட்டவணையினை இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.