10th English Question Issue | பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு குளறுபடி கேள்விகள்
10th English Question Issue
தமிழகத்தில் இன்று நடந்த ஆங்கில தேர்வில் வினாக்கள் குளறுபடியுடன் கேட்கப்பட்டதாக மாணவர்கள் புலம்பிதள்ளியுள்னர். மேலும் குளறுபடியான வினாக்களால் சென்டம் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்வில் பழைய வினாத்தாள்களை போன்று அதாவது, புதிய வினாத்தாள் போன்றுவடிவமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக கடந்த ஆண்டு உட்பட அனைத்து தேர்வுகளிலும் முதல் மூன்று இணைச்சொற்கள் (Synonyms) மற்றும் அடுத்த எதிர்சொற்கள் (Antonyms) கேட்கப்படும். ஆனால், இந்த தேர்வில் மாணவர்கள் யாரும் எதிர்பாராத வகையில், ஆறு இணைச்சொற்களான கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழம்பி தேர்வு அறையில் பதட்டம் அடைய தொடங்கினர். இதனால் சாியான விடை அளிக்க முடியாமல் திணறினர். இதனால் மூன்று மதிப்பெண்கள் பறிபோக வாய்ப்புள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Read Also: பிளஸ்2 கணித தேர்வுக்கு 5 மதிப்பெண்
மேலும் வினா எண் 28 அதாவது ரூட் மேப் கேள்வி தவறாகவும் கேட்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், மாணவா்கள் ஐந்து மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் தேர்வுத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
தேர்வுத்துறை அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சியிடம் கூறியதாவது, தற்போது ப்ளூபிரிண்ட் நடைமுறை இல்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டதாகவும், ப்ளூபிரிண்ட் இல்லதாதால், கேள்விகள் இவ்வாறு வடிவமைக்கலாம் என தெரிவித்துள்னர்.