You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் ரூ 1,100 கோடி இழப்பு, நீதிபதிகள் வேதனை

State level kalai thiruvizha competition postpone

வழக்குகளில் ஆஜராகமல் இருப்பது, ஒரு சில வழக்குகளை மட்டும் தேர்வு செய்து ஆஜராவது போன்ற செயலால், கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் அரசுக்கு ரூ 1100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோா்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.  

மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து, பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்கள் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாாித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடைவிதித்தது. தடையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. 

மனு மீதான விசாரணையின்போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இவ்வழக்கு மீண்டும் உயர்நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், எம் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. 

அதனால், அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்திருந்த தமிழக பொதுத்துறை செயலரை ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமா்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆஜரானார். 

இதன்பின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ ரவீந்திரன் ஆஜராகி வாதடியாவது, நேற்று முன்தினம் எவரும் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோருகிறோம். பண மோசடி விவகாரங்களில் அமலாக்கத்துறையிடன் இணைந்து செயல்பட மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால் பழிவாங்கும் நோக்குடன் வழக்குகள் இருக்கக்கூடாது. 

மாநில அரசு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அடுத்தகட்ட நகர்வு பற்றி, பொதுத்துறை தேவையான சட்ட ஆலோசனைகளை பெற, அவகாசம் வழங்க வேண்டும். விசாரணையை தள்ளிைவக்க வேண்டும், இவ்வாறு அவர் வாதாடினார்.

அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். அடுத்தமுறை, பொதுத்துறை செயலர் ஆஜராகுவதில் இருந்தும் விலக்களித்தனர். 

விசாரணையின்ேபாது நீதிபதிகள் கூறியதாவது, வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாதது ஏற்புடையதல்ல. சட்ட அதிகாரிகளான வழக்கறிஞர்கள், வழக்குகளை தேர்வு செய்து, அந்த வழக்குகளில் மட்டுமே ஆஜராக ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களையும் தெரிவிக்கின்றனர். இந்தச் செயலால், பொதுமக்கள் தான் அதிகம் பாதிப்படைவர். பணியில் தவறும் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதுபோல், தன் கடமையில் இருந்து விலகும் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான வழக்கறிஞர்களை நியமனம் செய்வது தொடர்பாக, தலைமை செயலரின் கவனத்துக்கு, பொதுத்துறை எடுத்து செல்ல வேண்டும். உதாரணமாக, வழக்குகளில் ஆஜாராகமல் இருப்பது சில வழக்குகளை மட்டும் தேர்வு செய்து ஆஜராவது போன்ற செயலால், கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் அரசு ரூ 1,100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது, இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.