Table of Contents
What is the Playschool Building Norm and Regulation – மழலையர் பள்ளி கட்டிட விதிமுறைகள் என்னென்ன
நாம் முந்தைய பதிவில் எப்படி ஒரு மழலையர் பள்ளிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்கான தகவல்களை கூறியிருப்போம். இதனை படிக்க இங்கு கிளிக் செய்க https://tneducationinfo.com/how-to-get-approval-to-play-school-from-government/
இந்த பதிவில் நாம் மழலையா் பள்ளிகளின் கட்டிட விதிகள் குறித்து சுருக்கமாக காண்போம்.
Playschool Building Norms – மழலையர் பள்ளி கட்டிட விதிகள் 2015 –
A ) மழலையர் பள்ளி தொடங்க விரும்புவர்கள் அவர்கள் சொந்த பள்ளி கட்டிடம் அல்லது மற்றொருவரின் கட்டிடத்தை (Leased Basis) அதாவது குத்தகை அடிப்படையில் வைத்து, அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம். குத்தகை அடிப்படையில் கட்டிடம் வைத்து பள்ளியை நடத்துபவர்கள் 5 வருடங்களுக்கு குறைவாக கட்டிட உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து இருக்கக்கூடாது. மேலும், குத்தகை எடுத்தவா்கள் முறையாக பதிவுத்துறையில் பதிவு செய்து தக்க ஆவணங்களுடன் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
B) விதிகள்படி பள்ளி உரிமையாளர்கள் ஓட்டு கட்டிடமோ அல்லது ஆஸ்பெட்டாஸ் ஷீட் வைத்து பள்ளிகள் நடத்துக்கூடாது. கட்டிடங்கள் காங்கீரிட் தளத்தில் ஆனவையாக இருக்க வேண்டும். (Reinforced Cement Concrete). உங்கள் குழந்தைகள் ஓட்டு கட்டிடமோ அல்லது ஆஸ்பெட்டாஸ் ஷீட் ஆன கட்டிடங்களில் படித்துக்கொண்டு இருந்தால், உடனடியாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். ஏனென்றால், இவை விதிகளுக்கு எதிராக உள்ளது.
C) பள்ளி சுற்றுவர் கற்களால் கட்டப்பட்டு முழுமையாக பணிகள் பூர்த்தி செய்து இருக்க வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கம்பிகளால் ஆன சுற்றுசுவர் அதாவது Fencing, Barbed Wire Fencing இருக்கக்கூடாது என விதி தெளிவாக குறிப்பிடுகிறது.
D) மழலையர் பள்ளி நுழைவு வாயிலின் அகலம் அதிகமாக இருக்க வேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், பள்ளி குழந்தைகளை உடனடியாக வெளியே அழைத்து செல்ல உதவும்.
E) விதிகள் படி, பள்ளி மாணவர்களுக்கு ஒரு வகுப்பில் ஒரு மாணவனுக்கு 10 சதுர அடி அளவு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

F) பாதுகாப்பு கருதி பள்ளி குழந்தைகள் தரை தளத்தில் உள்ள வகுப்பறைகளில் மட்டுமே அமர வைக்க வேண்டும். First Floor and Second Floorல் உள்ள வகுப்பறையில் அமர வைக்கக் கூடாது.
G) வகுப்பறை ஜன்னல் மற்றும் கதவுகள் தீ பற்றக்கூடிய மரத்திலானவையால் இருக்கக்கூடாது.
H) ஒரு வகுப்பறைக்கு இரண்டு நுழைவு வாயில் இருக்க வேண்டும். ஒரு நுழைவு வாயில் ஆசிரியர் வகுப்பு எடுக்கும் இடத்திலும், இரண்டாவது நுழைவு வாயில் வகுப்பு இறுதியில் இருக்க வேண்டும். குறிப்பாக இரண்டாவது நுழைவு வாயில் உட்புறம் சாதாரண வகையில் அமைந்திருக்கும் சிறு அளவிலான தாழ்ப்பாள் (Lock) கீழ் பகுதியில் மட்டுமே பொருத்தியிருக்க வேண்டும். அதே சமயத்தில் இரண்டாவது நுழைவு வாயில் வெளிப்புறம் தாழ்ப்பாள் போடக்கூடாது. ஒரு வேளை மாணவர்கள் உள்ளே சிக்கியிருந்தால், அவர்களே இரண்டாவது நுழைவு வாயில் திறந்து வெளியே வரும் வகையில் வசதிகள் செய்தியிருக்க வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
I ) கழிப்பறை கட்டிடத்தில் மாணவா்கள் இயற்கை உபாதை கழிக்க அவர்களுக்கு ஏற்ற வகையில் உபகரணங்கள் பொருத்தியிருக்க வேண்டும்.
J) பள்ளி நிர்வாகம், மாணவர்கள் விளையாடுவதற்காக தேவயைான விளையாட்டு உபகரணங்களுடன் விளையாடும் பகுதி பள்ளி வளாகத்தில் ஒதுக்க வேண்டும் மற்றும் பள்ளி நிர்வாகம் முறையாக இதனை பராமாிக்க வேண்டும்.
Conclusion:
மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, இவை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கும்பகோணம் பள்ள தீ விபத்து பிறகு பாதுகாப்பு விதிமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை இன்னும் ஏட்டில் மட்டும்தான் உள்ளது. ஆனால், பல பள்ளிகள் இதை பின்பற்றப்படுவதில்லை என்பதை நிதர்சனமாக உள்ளது. இனி, இம்மண்ணில் ஒரு பிஞ்சு உயிர் கூட பறிபோக கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இந்த தொகுப்பு குறித்து உங்கள் கருத்துகள் மறக்காமல் கமெண்ட் செய்யவும். உங்கள் கருத்து நாங்கள் தொடர்ந்து பணியாற்ற உத்வேகம் அளிக்கும் என நம்புகிறோம்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |