What is the Makkal Palli Scheme ? - மக்கள் பள்ளி திட்டம் என்றால் என்ன ? - முழு விவரம்
மக்கள் பள்ளி திட்டம் எப்படி உருவானது ?
கொரோனா பெருந்தொற்று காரணமாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு, ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.
அதே சமயத்தில், கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் மேலாக தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களின் கல்வி அடியோடு சிதைந்துவிட்டது. குறிப்பாக கிராமப்புறங்கள், மலைவாழ் கிராமங்கள் எவ்வித கல்வி தொடர்பின்றி இருந்து வந்தனர். இருந்தபோதிலும், ஒரு சில ஆசிரியர்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடம் நடத்தும் வகையில், தமிழ்நாடு நிதியமமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இந்த திட்டத்தை அறிவித்தார்.
மக்கள் பள்ளி திட்டம் நோக்கம் என்ன?
இதில் மாணவர்களின் கல்வி கற்றல் இடைவெளியை தன்னிறைவு செய்து, மீண்டும மாணவர்களை கல்வி செயல்பாடுகளில் திரும்பி கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின் படி, பள்ளிகளில் நடத்தாமல், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் அவர்கள் கிராமத்திற்கு சென்று பாடம் நடத்துவது, பொது இடங்களில் சமூக இடைவெளி பாடம் நடத்துவது ஆகும்.
மேலும் இந்த திட்டம் ஆறு மாதம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பள்ளி திட்டம் குழு
பள்ளி கல்வித்துறை செயலாளர் தலைமையில் இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான குழுவி்ல் மாவட்ட ஆட்சியர் முதன்மையானவராக இருப்பார். மேலும், PO-DRDA, CEO - DIET PRINCIPAL, DEO (1), HMs - 2/ Teachers -2, Self Help Group/ NYK, etc - 2., உள்ளிட்டோர் உறுப்பினர்களாக மாவட்ட குழுவில் செயல்படுவார்கள்.
வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பஞ்சாயத்து குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. இதில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், சமூக அமைப்புகள், பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து ஒருவர், வட்டார கல்வி அலுவலர் ஒருவர் ஆகியோர் உறுப்பினர் செயலர்களாக பணியாற்றுவார்கள்.
மக்கள் பள்ளி திட்டம் எங்கு அமல்படுத்தப்பட உள்ளன
பள்ளி கல்வித்துறை, முதல் கட்டமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்த திட்டத்தை வரும் அக்டோபர் 18ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி வடக்கு மண்டலத்தில் விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டம், மேற்கு மண்டலத்தில் கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டம், கிழக்கு மண்டலத்தில் கடலூா் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், தெற்கு மண்டலத்தில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அடுத்தகட்டமாக, பிற அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன.
மேலும் கலை குழுவினர் மூலம் இந்த திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், தன்னார்வலர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
சேர்க்கப்படும் தன்னார்வலர்கள் மாநில மேம்பாட்டு குழு செயலியில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து, மாணவர்கள், மாணவர்கள் வசிப்படம் கண்டறிய வேண்டும். ஒரு தன்னார்வலர்கள் 15 லிருந்து 20 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் சிறப்பாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
சிறப்பாக செயல்படும் குழுவிற்கு பொற்கிளி வழங்கப்படும், ஊடக மூலம் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தன்னாா்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
மேலும், பள்ளி கல்வித்துறை இதுதொடர்பான விரிவான செயல்முறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான உங்கள் குறித்து கிழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்