தமிழக அரசு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 வெளியிட்டுள்ளது. இதில் இரண்டாவது பகுதியாக தமிழ்நாடு அரசின் குழந்தைகளுக்கான கொள்கை மற்றும் வழிகாட்டும் கோட்பாடுகள், அதற்கான செயல்திட்டமும் குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின், குழந்தைகள் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளானது கீழ்க்காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- குழந்தைகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை
- 1989 (UNCRC)
- தேசியக் குழந்தைகள் கொள்கை 2013 (NPC 2013)
- தேசிய செயல் திட்டம் 2016 மற்றும் நமது உலகத்தை உருமாற்றுதல் (NPA 2016)
- ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி குறித்த 2030க்கான திட்டம் (UN-SDG)
தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை பின்வருவனவற்றை அங்கீகரித்து உறுதிசெய்கிறது
1. 18 வயது நிரம்பாத எவரொருவரும் குழந்தை எனக் கருதப்படுவர்.
2. ‘‘குழந்தைகளுக்கே முதல் கவனிப்பு’’ என்ற கொள்கையின்படி குழந்தைகள் நலம்தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அவை பொதுத்துறை அல்லது தனியார்துறை அல்லது நிர்வாக அமைப்புகள் அல்லது சட்டமியற்றும் அமைப்புகள் என எவற்றால் மேற்கொள்ளப்பட்டாலும்
அவை அனைத்திலுமே குழந்தைகளின் சிறந்த நலனே முதன்மையானதாகக் கொள்ளப்படும்.
3. அனைத்துக் குழந்தைகளுக்கும்:
- அவர்கள் பிறந்த இடம், பாலினம், மதம், சாதி, வர்க்கம், மொழி, மாற்றுத்திறனாளியாக இருக்கும் நிலை, சமூகம், பொருளாதாரம் அல்லது வேறு ஏதேனும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படாமல் இருக்க உரிமைகள் உள்ளன.
அனைத்துவிதமான துன்புறுத்தல், தவறாக நடத்தப்படுவது, புறக்கணிப்பு, வன்முறை, கொடுமைப்படுத்துதல் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்பட உரிமை உள்ளது. - குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அவர்களது கருத்துக்கள் கேட்கப்படவும், மதிக்கப்படவும் மற்றும் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உள்ளது.
- நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்றுவது, குழந்தைகளின்
ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு அவசியமானதாகும்.
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் கொள்கையின் இலக்கும் செயல்திட்டமும் என்ன?
இலக்கு
ஒரு பாதுகாப்பான சூழலில், ஆண் / பெண் குழந்தைகள் தங்களுடைய முழுத்திறனையும் அடையும் வகையில், ஒவ்வொரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல் மற்றும் குழந்தைகளுக்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல்.
செயல்திட்டம்
ஒவ்வொரு குழந்தையும், அனைத்து விதமான வன்முறை, தவறாக நடத்தப்படுதல் மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படவும், அவர்களுக்கு தரமான சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும், அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளிலும்
அவர்களுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழலை உருவாக்கவும், மேலும் “எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் பாதுகாக்கப்படவேண்டும்” என்ற கொள்கை கடைபிடிக்கப்படுவதை உறுதி
செய்யவும், தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |