அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Vanavil Mandram | வானவில் மன்றம் என்றால் என்ன | STEM திட்டம் என்றால் என்ன

Vanavil Mandram | வானவில் மன்றம் என்றால் என்ன | STEM திட்டம் என்றால் என்ன

Vanavil Mandram

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தம் வகையில் 25 கோடி மதிப்பிலான வானவில் மன்றம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கும் காட்சியை நேரலையில் காண்க – Click Here

STEM திட்டம் என்றால் என்ன

இதற்கிடையில், STEM திட்ட மாநில வல்லுநர் குழு உறுப்பினர், பேரா.க. லெனின்பாரதி அவர்கள் இந்த திட்டம் என்றால் என்ன?, அதன் நன்மைகளை விளக்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது,

STEM என்பது Science, Technology, Engineering, Mathematics என்பதன் கூட்டு தொகுப்பாகும். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம், பொறியியல்,கணிதம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை கொண்டதான ஒரு கற்றல் செயல் திட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை நான்கின் தாக்கங்களும் இன்றி வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளோம். அறிவியல் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், தொழில்நுட்பமும், பொறியியலும் மனித வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளின் அம்சமாகவும் உள்ளது.அது போலவே கணிதமும்.  இந்த  STEM திட்டத்தை அடிப்படையாக கொண்டு வானவில் மன்றங்களை தமிழ்நாட்டின் பள்ளிகளில் துவங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்க அம்சம். காலத்தே தேவையான முடிவு.

Read Also: வானவில் மன்றம் என்றால் என்ன?

STEM திட்டத்தின் நன்மைகள்

1.மாணவ பருவத்திலேயே படைப்பாற்றல்,விமர்சனஅறிவு, அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சி சிந்தனை , தர்க்க சிந்தனை, பகுத்தறியும் திறன் ,கூட்டு உழைப்பு ,புத்தாக்க சிந்தனை போன்றவற்றை வளர்த்தெடுக்க இத்திட்டம் உதவும்.

2. STEM என்பது திட்ட அடிப்படையிலான கற்றலை (project based learning) ஊக்குவிக்கிறது.

3.வகுப்பறை பாடங்களை செய்முறைகள் மூலம் கற்பது பாடங்களை, அறிவியல் விதிகளை புரிந்து கொள்வதை எளிதாக்கும்.

4.அறிவியல், தொழில்நுட்பம்,பொறியியல் ,கணிதம் ஆகிய துறைகளில் நுண்ணறிவை பயன்படுத்த இத்திட்டம் உதவும்.

5.அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்த இக்காலத்திலும் அறிவியல் மனப்பான்மை (scientific temper)  குறைந்து வருகிறது.அறிவியல் மனப்பான்மையை மாணவ பருவத்திலேயே வளர்த்தெடுப்பது.. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு விடை தேடும் சமூகத்தை உருவாக்க இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.

6.இயற்பியல் ,வேதியியல் கணிதம் போன்ற அடிப்படை  அறிவியல் (fundamental science) பாடங்களை கற்க மாணவ மாணவிகள் மத்தியில் தற்காலத்தில்  ஆர்வம் குறைந்து வருகிறது.அடிப்படை அறிவியல் பாடங்களின் மீதான பயம் அதிகரித்துள்ளது.காரணம் பாடங்களை புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே . இந்நிலையை போக்க STEM திட்டமும் அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வானவில் மன்றங்களும் உதவும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Posts