You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tamil Nadu CM Helpline Number 1100 | கணினி ஆசிரியர்களின் நூதன போராட்டம்

Tamil Nadu Children Education Policy 2021

Tamil Nadu CM Helpline Number 1100 | கணினி ஆசிரியர்களின் நூதன போராட்டம்

Tamil Nadu CM Helpline Number 1100

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தமிழக அரசின் 1100 என்ற குறைதீர் எண்ணிற்கு அழைத்து தங்களது கோரிக்கையாக புகாராக அளித்து வருகின்றனர்.

ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் பள்ளி போலவே, அரசு தொடக்கப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும், கிட்டதட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் வாழ்வாதரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு பள்ளிகளில் வேலை வாய்பினை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மனு எழுதி வருகின்றனர்.

குறிப்பாக, அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் கணினி ஆசிரியர் பணியிடங்களில் கூட தற்காலிக அடிப்படையில் கூட பணியமர்த்த பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் முன்வரவில்லை என்று ஆதங்கம் அடைகிறார்கள்.

இதுபோன்ற செயல்பாடுகளால், மாநில அரசுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு போதிய அளவில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்பதே குறிக்கிறது. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் லட்சகணக்கான ஏழை மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியாவில் கணினி அறிவியல் படிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது. தற்போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்களும் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த கணினி ஆசிரியர்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தி இந்த ஆட்சியின் மீது நிலவ தொடங்கியிருக்கிறது என்று கணினி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் 1100 என்ற குறைதீர் எண்ணிற்கு, மாநிலத்தில் உள்ள கணினி ஆசிரியர்கள் தொலைபேசியில் அழைத்து, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் 1100 சேவை மையம் கணினி ஆசிரியா்களால் கதிகலங்கியுள்ளது. மேலும், அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தையும் அறிவிக்க வாய்ப்புள்ளது.