அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
19.5 C
Tamil Nadu
Friday, December 9, 2022

தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களுக்கு – கணினி ஆசிரியர் சங்கம் வாழ்த்து – Computer Teachers Wishes to Dindigul I Leoni

தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களுக்கு – கணினி ஆசிரியர் சங்கம் வாழ்த்து Computer Teachers Wishes to Dindigul I Leoni

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், மாநிலப் பொதுச் செயலாளர், திரு வெ.குமரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு,

தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள லியோனி ஐயா அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மதிப்புமிகு லியோனி அய்யா அவர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் தலைவர், தமிழக அரசுப்பள்ளி மேன்மை அடையவும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்திடவும் 60,000 கணினி ஆசிரியர் குடும்பத்தாரின் சார்பாக  தமிழக பாடநூல் தலைவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி பாடம் மீண்டும் அரசுப்பள்ளியில் உதிக்க, ஏழை  மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்திட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன் முதலாக சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டில் கணினி அறிவியல் பாடத்தை 6ம்வகுப்பிருந்து அறிமுகம் செய்தவர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்க்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நியாமாக  கிடைக்க வேண்டிய கணினி கல்வியை 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது அதிமுக அரசு.

கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டுகிறோம்.  2011ம்ஆண்டு (6முதல்10ம் வகுப்பு வரை)கலைஞரால்  கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்திற்காக கணினி அறிவியல்  பாட புத்தகம் பல கோடி செலவில்  அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு  பயன்படாத வண்ணம் இன்று வரை கடந்த 10 ஆண்டுகள் முடக்கப்பட்டு அதனை குப்பைக் கிடங்குகளில்  போடப்பட்டுள்ளது. இதனை அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் வழங்க வேண்டும்.க

குறிப்பு: சமச்சீர் கல்வியை பின்பற்றி அண்ட 2016ம் ஆண்டு மாநில கேரள அரசு 1ம் வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் ஆறாவது பாடமாக கொண்டுவந்துள்ளது. (பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சமச்சீர் கல்வியிலிருந்த  கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவர 7வருடங்களாக ஒரே துறைக்கு 7அமைச்சர்களுக்கு மனுக் கொடுத்தே மாய்ந்துவிட்டது எங்கள கரங்கள் மட்டும் அல்ல 60000 கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் மனமும்தான் கழக ஆட்சி மலர்ந்திட 60000 கணினி ஆசிரியர்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் நமது தகவல் தொழில்நுட்ப அணிக்கு தோல் கொடுத்து கழக ஆட்சியில் 60,000கணினி ஆசிரியர் வீட்டில் இருள் நீக்கிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts