திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவர்கள் அடையாள அட்டை மாஸ்க் அணிந்து வராததால் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறக்கப்பட்டது. பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் சராசரியாக 60 சதவீதம் மாணவ, மாணவிகள் முதல்நாளான நேற்று பள்ளிக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். நியமிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள், பள்ளிகளில் நேற்று ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாவட்டத்தில் காலியாக உள்ள நான்கு கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு நிர்வாகம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஜனவரி 22ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
கோவை மத்திய சிறையில் உள்ள இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் பட்டம் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தபோவதாக கோவை சிறை எஸ்பி செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் இணையதள வசதி மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழிநுட்ப ஆய்வகங்களை தயார் நிலையில் வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆய்வகங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், பொறியாளரை கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்
கோவை மாவட்டத்தில் 49 சதவீதம் பள்ளி மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
தமிழகம் முழுவதும் எம்பிபிஎஸ் பாடங்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது.
பள்ளிகளில் கொள்முதல் செய்யப்படும் விளையாட்டு உபகரணங்கள் விவர பட்டியலை கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |