TNSED APP சுத்திட்டு இருக்குங்க.. செல்போன் டவர் அமைங்க.. தலைமை ஆசிரியர் அதிரடி
TNSED APP
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள மோர்தானா நடுநிலை பள்ளி, பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
மோர்தானா கிராமத்தில் ஒரு நடுநிலை பள்ளி, ஒரு துவக்கப்பள்ளி இயங்கி வருகின்றது. கல்வித்துறையில் தற்போது எமிஸ் இணையதளம் மற்றும் டிஎன்எஸ்இடி செயலி ஆகியவற்றின் மூலம் அன்றாடம் ஆன்லைன் ஆசிரியர் வருகை பதிவு, பேஸ்லேன் சர்வே, ஆன்லைன் டிசி, மாணவர் சேர்க்கை போன்ற பல பணிகள் நடந்து வருகிறது. மேலும் பிஇஓ அலுவலகம், பிஆர்சி அலுவலகம், ஆகியவற்றிற்கு தினந்தோறும் பல புள்ளி விவரங்கள் உடனுக்குடன் வாட்ஸப் மூலமாக தர வேண்டியுள்ளது. இந்த பகுதியில் செல்போன் டவர் எதுவும் அமைக்கப்படாததால், பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய எந்த சிக்னல்ஸ் கிடைப்பதில்லை.
Also Read: TNSED Administrators Application PDF Download
மேலும் 1.8.2022 முதல் ஆசிரியர் வருகை பதிவு மற்றும் மாணவர் வருகை பதிவை டிஎன்எஸ்இடி ஆன்லைன் செயலி வழியாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
எனவே அரசு பள்ளிகள், மோ்ாதானா பகுதி மக்கள், மோ்தானா அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு மோர்தானாவில் உடனடியாக ஒரு செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |