சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாெமாழி, மாணவியின் ேவண்டுகோளான பள்ளி சீரமைப்பு கோரிக்கை தொடர்ந்து, அந்த பள்ளியில் பார்வையிட்டு, அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலயைில், கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை அரசு பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர், அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், மாணவர்களின் முந்தைய மதிப்பெண் பட்டியல் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிகளுக்கு என்ன தேவைகள் உள்ளது என்பதை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து இன்று கோவை பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். கல்வித்துறை அமைச்சரின் திடீர் விசிட் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயத்தில், அவர் பள்ளிகளில் ஆய்வு செய்தபோது, அவர் தலைமையாசிரியர் இருக்கையில் அமராமல், தனி ஒரு இருக்கையில் அமர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டது, ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |