15 அம்ச கோரிக்கைகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரதானமானது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, 21 மாத கால நிலுவை தொகை வழங்குதல், சிறப்பு கால முறை ஊதியம் உள்ளிட்டவை.
தமிழக அரசுக்கு நியாமான முறையில் தங்களது கோரிக்கையை எடுத்து செல்ல வட்டார அளவில் தொடங்கிய போராட்டம், ஜனவரி 22, 2019ம் தேதியன்று, காலவரையற்ற போராட்டம் நோக்கி நகர்ந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தர்ணா, காத்திருப்பு என பல வடிவங்களான போராட்டம் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது காவல்துறையை தவிர.
அடுத்தடுத்த நடந்த போராட்டத்தில், காவல்துறையின் காட்சிகளும் தென்பட தொடங்கியது. சில இடங்களில் காவல்துறையினர் ஆசிரியர்களை போராட்ட களத்தில் இருந்து விரட்டியடித்தனர். வயதானவர்கள் என பாராமல், அவர்களை மண்டபங்களில் நிரப்பி வைத்தனர், சில பகுதிகளில் உணவு கூட மறுக்கப்பட்டது.
இந்த போராட்ட களத்திலேயே, வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல், கல்வித்துறை கல்வி அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அச்சுறுத்தியது. அடுத்தடுத்த போராட்டத்தில், முன் இருந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் பாய தொடங்கின, அவர்கள் தேடி, தேடி கைது செய்யப்படும் காட்சியும் அரங்கேறின. இதனை பயன்படுத்திய, கல்வித்துறை, நீங்களும் போராட்டத்திற்கு சென்றால், இதை நிலைதான் என கூறியது. பயந்த பல போ், போராட்ட களத்திற்கு செல்லாமல் தவிர்த்தனர்.
இன்னும் சில பேர், துனிந்து போராட்ட களத்திற்கு சென்று போராடினர். அங்கு அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, போராட்ட களம் சுக்குநூறாக உடைக்கப்பட்டதால்.
அப்போது, ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என பல பேர் துறை ரீதியான நடவடிக்கை, வழக்குப்பதிவு, கைது, சிறை அடைபடுதல் என உளவியல் ரீதியாக தாக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வந்த அவா்கள் நிசப்பதமாகினர்.
அதன்பின்னர், அவர்களின் கோரிக்கை மறந்து, தங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, ஆசிரியர்கள் பதவி உயர்வு பறிக்கப்பட்டது, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பண பலன்கள் முடக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக ஜேக்டோ – – ஜியோ சார்பிலும், ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் பல முறை ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என கடிதம் வாயிலாகவும், கோரிக்கை மனு வாயிலாகவும் இந்த அரசுக்கும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது அமைதியே காணப்பட்டது, சில நாட்களுக்கு முன்பு வரை ஏமாற்றமே மிஞ்சியது.
தேர்தல் நெருங்கும் காலத்தில், ஆசிரியர்கள மீதான நடவடிக்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது உங்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன் தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மீதான அக்கறையா? அல்லது அரசியலா? என்று.
உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.