You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Temporary Teacher Salary Issue | ஆசிரியர்களுக்கு சம்பளம் இழுத்தடிப்பு

Typing exam apply Tamil 2023

TN Temporary Teacher Salary Issue | ஆசிரியர்களுக்கு சம்பளம் இழுத்தடிப்பு

TN Temporary Teacher Salary Issue

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி பிரிவில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 1300 நடுநிலை பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளில் எல்கேஜி, யுகேஜி பிரிவுகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையில், பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த, எல்கேஜி, யுகேஜி பிரிவு தற்போது சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Read Also: இல்லம் தேடி தன்னார்வலர்கள் ஊதியம்

இந்த நிலையில், இப்பிரிவு குழந்தைகளை கையாள, கல்வித்துறை சார்பில் கடந்த டிசம்பர் மாதம் தற்காலிக முறையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனா். இதில் இல்லம் தேடி தன்னார்வலர்களும் அடக்கம். தற்போது இவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் மாத சம்பளமாக ரூ 5000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக இவர்களுக்கு மாத சம்பளம் வழங்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

அங்கன்வாடி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, கடந்த மூன்று மாதங்கள் சம்பளம் பெறாததால், குடும்ப செலவ, மருத்துவ செலவு உள்ளிட்டவை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். சம்பளம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், அவர்களும் சரியான பதில் அளிப்பதில்லை. இதனால், ஆசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலைதான் பல்வேறு மாவட்டங்களில் தொடர்கிறது. அதிகாரிகள் சம்பளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.