தற்காலிக ஆசிரியர் நியமனம் பட்டதாரிகளிடம் விண்ணப்பம் வாங்க மறுத்ததால் பரபரப்பு
தற்காலிக ஆசிரியர் நியமனம்
தமிழகத்தில் உள்ள 13,331 ஆசிரியர் காலிபணியிடங்கள் நிரப்ப தகுதிவாய்ந்த தற்காலிக ஆசிரியர்களிடம் இன்று முதல் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நியமனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி, இன்று காலை முதல் பட்டதாரிகள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று, ஆசிரியர் காலி பணியிடம் அறிந்து ஆர்வத்துடன் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி அலுவலகங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை பட்டதாரிகளிடம் வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்ற பல பட்டதாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
Read Also This: தற்காலிக ஆசிரியர் விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதா?
இதுகுறித்து பட்டதாரி ஒருவர் கூறியதாவது, மற்ற மாவட்டங்களை போலவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் காலி பணியிடம் உள்ளது. ஆசிரியர் பணியில் ஆர்வம் என்பதால், நான் இன்று காலை வேடச்சந்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்றேன். என்னை போலவே, 100க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர்.
விண்ணப்பம் கொடுக்க சென்றபோது, அங்குள்ள பணியாளர்கள் தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பாக கல்வித்துறையிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை, அதனால் நாங்கள் விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு வந்தவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர், முறையான அறிவிப்பு செய்யாததாலும் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். வேடசந்தூர் மட்டுமின்றி, மாவட்ட கல்வி அலுவலகமான வத்லகுண்டு, திண்டுக்கல் உள்ளிட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் பெறவில்லை. மற்ற மாவட்டங்களை போலவே, எங்களிடம் விண்ணப்பம் பெற வேண்டும். இதுகுறித்து மாநில கல்வித்துறை விளக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், பட்டதாரிகள் மற்றும் பணியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் விண்ணப்பம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
உங்கள் மாவட்டம் நிலவரம், பிரச்சனை, குறை என்னவென்று கமெண்ட்-ல் மறக்காமல் குறிப்பிடுங்கள்.