பிப்ரவரி 1ம் தேதி பள்ளி கல்லூரி திறப்பு என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் வரும் 1ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தியது. தற்போது, அதன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அந்த குறிப்பில், தமிழகத்தில் நோய் பரவல் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதுமான மருத்துவ கட்டமைப்பில் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட உள்நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ ALSO: செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் – உயர்கல்வி அமைச்சர் பேட்டி – TN Semester Exam Update

பிப்ரவரி 1ம் தேதி பள்ளி கல்லூரி திறப்பு:
மேலும், அந்த அறிவிப்பில் மழலையர் பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை. மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.
தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்லைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.