அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

TN Primary School Teacher News | தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புதிய டாஸ்க் முடிக்க உத்தரவு

TN Primary School Teacher News | தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புதிய டாஸ்க் முடிக்க உத்தரவு

தொடக்க கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளி மரங்களில் இருந்து உதிரும் இலைகள் பள்ளி கட்டிட மேற்கூரைகள் விழுந்து குப்பையாக சோ்வதால், மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகளை அகற்றிட வேண்டும்.

Also Read: சம வேலைக்கு சம ஊதியம் சாத்தியமா?

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

மேலும், கட்டிடத்தின் மேற்கூரையில் மழைநீர் தேங்காதவாறும், மழை நீர் வடிவதற்கான துவாரங்கள் இலை, தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறு தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  

தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தின் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகள் இன்றி, காண்பதற்கு ஆழகாகவும், தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி பராமரிப்பு பணி

தூய்மை பணிகளில் மாணவர்களில் ஈடுபடுத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளி பராமரிப்பு மானியம் பயன்படுத்தி, வெளி பணியாட்கள் வைத்து தூய்மை பணிகள் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் தூய்மை பணி செய்வதற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிபுரியம் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்கள் அணுகி பெற்று, தூய்மை பணிகளை செய்ய வேண்டும்.

நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கண்ட பணிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts