TN Plus Two Student Shocking | 100க்கு 138 மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மாணவி
TN Plus Two Student Shocking
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழ் பாடத்தில் 100க்கு 138க்கு மதிப்பெண் என முடிவு வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
Read Also: பிளஸ் 2 துணைத்தேர்வு அட்டவணை 2023 வெளியீடு
மதுரை மாவட்டம் சூரக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்னும் மாணவி திருமங்கலம் பிரான்சிஸ் பள்ளியில் பன்னிெரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். நேற்று முடிவு வெளியான நிலையில் தேர்வு முடிவு பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் தமிழில் 100க்கு 138 மதிப்பெண்களும், இயற்பியலில் 71 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 56, வேதியியலில் 71 மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி உள்ளது மூன்று பாடங்களில் அதிக மதிப்பெண் இருந்தும் பட்டியலில் தேர்ச்சி பெறவில்லை பெயில் என்று வந்துள்ளது. 600க்கு 514 மதிப்பெண்கள் எடுத்துள்ளபோதும் மூன்று பாடங்களில் தோல்வி என்று வந்துள்ளதால் அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல் மாணவி தவித்து வருகிறார்.