TN Plus One Name List Correction | பிளஸ் 1 பெயர் பட்டியல் திருத்தம்
TN Plus One Name List Correction
பிளஸ் 1 மாணவர் பெயர் பட்டியலில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் திருத்தம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தோ்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Read Also: அடிப்படை கணிதம் திணறும் மாணவர்கள்
அதில் தங்கள் மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை தலைமை ஆசிரியர்களின் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.