அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

TN Latest Government Job இந்த அரசு துறையில் 10,200 காலிபணியிடம் நிரப்ப முடிவு

TN Latest Government Job இந்த அரசு துறையில் 10,200 காலிபணியிடம் நிரப்ப முடிவு

TN Latest Government Job

தமிழக மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே இரண்டு, மூன்று பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்கின்றனர்.

இதனால் 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு, 2,900 கள உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். கொரோனா ஊரடங்கு, சட்டசபை தேர்தலால் தேர்வு நடத்தவில்லை. அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இந்தாண்டு ஜூலை 4ல் மின்வாரியம் அறிவித்தது.

PGTRB CV List 2022

காலிபணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மின்கம்பம் நடுதல், கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கள பிரிவில் 10,200 பேரை தேர்வு செய்ய மின்வாாியம் முடிவு செய்துள்ளது. இதற்கு அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது, அனைத்து பதவிகளுக்கும் மின்வாரியமே தேர்வு நடத்தி ஆட்களை நியமித்தது. தற்போது மின்வாரியம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பணியாளர் தேர்வாைணயம் தேர்வு செய்ய உள்ளது.

மின்வாரியத்தில் அவசர தேவையாக கள பணிக்குதான் ஆட்கள் தேவை. எனவே, கள பணிக்கு 10,200 ஊழியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், தேர்வாணைய அதிகாரிகளை சந்தித்து, ஆட்கள் தேர்வு செய்துதர வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

(Source : Dinamalar)

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts