You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Engineering Course Cut off Mark Details in Tamil | இன்ஜினியரிங் படிப்பு கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு?

TN Engineering Course Cut off Mark Details in Tamil

TN Engineering Course Cut off Mark Details in Tamil | இன்ஜினியரிங் படிப்பு கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு?

TN Engineering Course Cut off Mark Details in Tamil

பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் 690 மாணவர்கள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதால் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியானது. இதில் தேர்வெழுதிய 94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கணித பாடத்தில் 690 பேர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

கடந்த ஆண்டில் 1,858 பேர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 3 பங்கு குறைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Read Also: பொறியியல் படிப்புக்கு எப்படி கட் ஆப் மதிப்பெண்கள் கணக்கிடுவது

வேதியியல் பாடத்தை பொருத்தவரை கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 3,909 பேர் பெற்றுள்ளனர். இதேபோல இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 634-ஆக இருந்த நிலை யில் இந்த ஆண்டு அது 812-ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு உயிரியலில் 1,494 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணித அறிவியலில் 4,618 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3,827 பேர் சென்டம்' பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு 4,618-ஆக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8,544 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 200 மதிப்பெண்ணாகக் குறைக்கப்பட்டு (கணிதம் 100, வேதியியல்- இயற்பியல் தலா 50 என 100 மதிப் பெண்) அடிப்படையில் பொறியியல் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த ஆண்டு கணித பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் கூட வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் 2 மடங்கு பேர் கூடுதலாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பொறியியல் தரவரிசை பட்டியலைப் பொருத்தவரை இயற்பியல், வேதியியலைவிட 2 மடங்கு கூடுதல் முக்கியத்துவம் கணித பாடத்துக்கு கொடுக்கப்படுகிறது. எனவே, பொறியியல் கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைய வாய்ப்பிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்