TN Computer Science Subject | கணினி பாடத்தை அரசு பள்ளியில் அமல்படுத்துக கணினி ஆசிரியர் கோரிக்கை
TN Computer Science Subject
மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக்குழு மண்டல அளவிலான கருத்துகேட்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கல்வி அமைப்பை சோ்ந்தவர்கள் மாநில கல்வி கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை வலியுறுத்தி பேசினர். குறிப்பாக, அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர் பேசினர்.
Read Also: கணினி ஆசிரியர்கள் நியமிக்க கோரி மத்திய கல்வி அமைச்சகத்திடம் மனு
குறிப்பாக, கணினி ஆசிரியர்கள் சார்பில் கோவையை சேர்ந்த வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த கோமளவள்ளி என்பவர் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து பேசினார்.
அவா் பேசும்போது, தனியார் பள்ளிகள் கணினி சார்ந்த பயிற்சி மற்றும் பாடத்தை மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞர் ஏற்கனவே அறிவித்தபடி, கணினி பாடத்தை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கல்விக்குழுவிடம் வலியுறுத்தினார்.
மேலும், இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் குறைந்தபட்ச கணினி கல்வியை பெற்றிருக்க வேண்டும். ஆனால், கணினி கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கணினி கல்வியை அரசு பள்ளிகளில் கொண்டு வர வேண்டும் என்றும், இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
இதுதவிர, அரசு பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் கல்விக்குழுவிடம் கோரிக்கையை வலியுறுத்தினார்.