TN 10th Public Exam Time Table 2023 | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2023
TN 10th Public Exam Time Table 2023
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறையின் முதுகெலும்பாக செயல்படும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி, மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் அடைவுகளை துல்லியமாக அளவீடு செய்து பொது தேர்வுகளை நடத்தி மிக முக்கிய நிரந்தர ஆவணமான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர வழிவகை செய்கிறது.
Read Also: அறிவோம் அரசு தேர்வுகள் இயக்ககம் செயல்பாடுகள்
அதன்படி தமிழக அரசு 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கான கால அட்டவணை இன்று வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
தேர்வு நேர விதிப்படி, அரசு தேர்வுகள் இயக்ககம் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை, வினாத்தாள் படிக்க மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை, தேர்வர்கள் விவரம் சரிபார்க்கப்படுகிறது. தேர்வு நேரம் 10.15 மணி முதல் 1.15 மணி வரை பின்பற்றப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
Date | Day | Subject |
6.4.2023 | Thursday | Language |
10.4.2023 | Monday | English |
13.4.2023 | Thursday | Mathematics |
15.4.2023 | Saturday | Optional language |
17.4.2023 | Monday | Science |
20.4.2023 | Thursday | Social Science |