TN 10th Maths Exam bonus Marks | பத்தாம் வகுப்பு கணித தேர்வு மதிப்பெண் வழங்க உத்தரவு
TN 10th Maths Exam bonus Marks
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாவுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதி கணித தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு எழுதிய மாணவர்கள் வினாக்கள் கடினமாக இருந்தது என தெரிவித்தனர். இதேேபால் ஆசிரியர்களும் தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மனு அனுப்பியிருந்தனர்.
Read Also: பள்ளி திறப்பு எப்போது 2023

இந்த நிலையில், ஒரு மதிப்பெண் வினாவில் x- அச்சுக்கு செங்குத்தாக உள்ள நோ்கோட்டின் சாய்வு என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்ட 1, 0, இன்பினிட்டி மற்றும் , -1 என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் கொடுக்கப்பட்ட விடைகள் தவறு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த வினாவுக்கு விடை எழுத முயற்சி செய்திருந்த மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதேேபால், அச்சு பிழை, தவறான விடை உள்ளிட்ட காரணங்களால், ஆசிரியர்கள் வினா எண் 4, 26, 29, 37 38, 39 போன்ற கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதுதொடர்பான எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.