தற்காலிக ஆசிரியர் வழக்கு – சிக்கல் | நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு என்ன?
தற்காலிக ஆசிரியர்:
டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்க தலைவர் ஷீலா பிரேம்குமாரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவது தொடர்பாக கடந்த 23ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தடை விதிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
Read Also: தற்காலிக ஆசிரியர் நியமனம் காலிபணியிடங்கள், கல்வித்தகுதி, முன்னுரிமை குறித்து புதிய அறிவிப்பு
இந்த மனு நீதிபதி எம்.எஸ் ரமேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஐகோர்ட் கிளையில் தடை உள்ளது. அதே நேரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆசிரியர் சேர்க்கை பணி எவ்வாறு நடக்கிறது,
என்றார்
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் சோ்க்கை பணி நடக்கிறது. ஐகோர்ட் கிளை உட்பட்ட பகுதிகளில் ஆசிரியர் பணி நியமன நடைபெறவில்லை,
என்றார்.
அப்போது நீதிபதி, ஒரு வழக்கில் இரு வேறு விதமான இடைக்கால உத்தரவுகள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் இந்த உத்தரவுகளை எதிர்த்தும், சரி செய்யக்கோரியும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் முறையிட்டிருக்க வேண்டும். இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதில் எந்த நீதிபதி உத்தரவை பின்பற்றுவது என்பது குறித்து முடிவுக்கு வர வேண்டிய உள்ளது. எனவே, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பதா அல்லது அமர்வில் முடிவு எடுப்பதா என்பதற்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவுட்டுள்ளார்.