BRTEs demand school education department to conduct counselling
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் இன்று பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்களை நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், 21.6.2004க்கு பின்னர், ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு நடைபெறவில்லை, எனவே உடனடியாக கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
அதே ஆண்டு கலந்தாய்வில் பாதிக்கப்பட்டு, பணி நிரவலில் வெளிமாவட்டங்களுக்கு சென்று ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கலந்தாய்வு மூலம் நிவர்த்தி செய்திட வேண்டும்.
அரசாணை நிலை எண் 7.9.2006ன் படி ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்திட வேண்டும்.
காலிபணியிடங்களை விரைவில் நிரப்பட வேண்டும்.
நோய் தொற்று குறைந்துள்ளதால், பள்ளிகளை திறந்திட வேண்டும், முன்னதாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும்.

ஆசிரியர் பயிற்றுநர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை முறையில் IFHRMS, சேர்த்திட வேண்டும். மதுரை மாவட்டத்தில் பணி நிறைவு மற்றும் மறைந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பண பலன்கள் வழங்கிட வேண்டும்.
ஆசிரியர் பயிற்றுநர்களின் நிலையான பயணப்படியினை ரூபாய் 5 ஆயிரம் ஆக உயர்த்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நிர்வாக நடைமுறைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் நேரடி தேர்வு நியமனத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியுள்ளது போல் ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |