அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023

Teacher Protest at Student Home| மாணவர் வீட்டு முன் ஆசிரியர் தர்ணா

Teacher Protest at Student Home | மாணவர் வீட்டு முன் ஆசிரியர் தர்ணா

Teacher Protest at Student Home

வறுமை காரணமாக 10ம் வகுப்பு மாணவனை பள்ளிக்கு அனுப்பாததால், அவர்களின் வீட்டுக்கே சென்று தெலங்கானா ஆசிரியர் ஒருவர் வீட்டு முன்பு தர்ணா செய்து பெற்றோர் சம்மதத்தை பெற்றோர்.

தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி அரசு உயர்நிலை பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், வரும் மாா்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்பவர் மட்டும் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.

Read Also: பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி விடுமுறை

தலைமையாசிரியர் உத்தரவின்பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன்குமார், நவீன் வீட்டுக்கு சென்று விசாரித்தார். வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப, மாணவனின் பெற்றோர் மறுத்துவிட்டனர்.

இதனால் மாணவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று, வீட்டு முன் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் தர்ணா செய்தார். உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தையும் புரிய வைத்தார்.

அதன்பிறகு, நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்து பிரவீன்குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினார்.

Related Articles

Latest Posts