TANCET Result Date 2023 | டான்செட் ரிசல்ட் தேதி எப்போது
TANCET Result Date 2023
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத்தேர்வு இயக்குனர் ஸ்ரீதர், நிருபர்களிடம் கூறியதாவது, எம்இ, எம்.பிளான், எம்.டெக், எம்ஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கான சீட்டா தேர்வு முதல் முறையாக நடத்தப்பட்டு வருகிறது.
Read Also: கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
சீட்டா தேர்வின்மூலம் ஒரே விண்ணப்பத்தின் கீழ் நுழைவு தேர்வும், மாணவர் கலந்தாய்வும் நடைபெறும். வெளிப்படை தன்மையோடு மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு தேர்வு எழுதிய பின் வினாத்தாளை எடுத்து செல்ல அனுமதி உள்ளது. இதற்கு முன் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. விடைகுறிப்பில் தவறுகள் இருப்பின் மாணவர்கள் சேலஞ் செய்யலாம். நுழைவுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். டான்செட் தேர்வு எழுதியவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெற உள்ளது. அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டம். சீட்டா தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்தாய்விற்கான விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.