You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கீடு முழுவிவரம்

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கீடு முழுவிவரம்

இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறிப்பில், உயர்கல்வி துறையில் அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின்  இளைஞர்களின்  ஆற்றலையும்,மனித    வளமாக மாற்றுவதற்கு இந்த அரசு உயர்கல்வித் துறையின் மூலம் முக்கியமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் தற்போது 49 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரி விகிதத்தை விட இரு  மடங்கு அதிகமாகும்.    2018-19ஆம்  ஆண்டின்  பாலின சமநிலைக் குறியீடு 0.97 ஆக உள்ளது. பெண்களுக்கு சமமான பள்ளி வசதிகள்  வழங்கப்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது.

2011-12ஆம்  ஆண்டு  முதல்,  37  இருபாலர்  அரசு  கலை  மற்றும் அறிவியல்  கல்லூரிகளையும்,  3  அரசு  பெண்கள்  கலை  மற்றும் அறிவியல்  கல்லூரிகளையும், 21 பல்தொழில்நுட்பக்  கல்லூரிகளையும் 4 அரசு  பொறியியல்  கல்லூரிகளையும் அரசுநிறுவியுள்ளது.  வேலைவாய்ப்பினை  அதிகரிக்கும்  நோக்கத்தில்  அரசு  கலை  மற்றும் அறிவியல்   கல்லூரிகளில்   1,577   புதிய   பாடப்   பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

முதல்  தலைமுறை  பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டண  சலுகை  ஒவ்வொரு  ஆண்டும்  2  இலட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக, 2020-21 ஆம் ஆண்டின் திருத்த  மதிப்பீடுகளில் 391.50கோடி  ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது.  2021-22  ஆம்  ஆண்டு  இடைக்கால  வரவு-செலவுத்  திட்டமதிப்பீடுகளில்உயர்கல்விக்காக  மொத்தமாக 5,478.19கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.