அரசுப் பள்ளியில் கணினி அறிவியல் பாடம் உதித்த நாளாக கருணாநிதி அவர்கள் பிறந்த நாளை கொண்டாடுவோம் என கணினி ஆசிரியர் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.குமரேசன் கூறுகையில், அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கற்க வேண்டும் என்ற நோக்கில் முதன்முதலாக அரசுப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்து தமிழகத்தில் தனி முத்திரை பதித்தார் மாண்புமிகு முதல்வர் மறைந்த கருணாநிதி.

கணினி அறிவியல் மேல்நிலை கல்வியோடு நின்று விடாமல் 2009ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பிலிருந்தே அறிமுகம் செய்தார் . இன்றைய காலகட்டத்தில் கணினி அறிவியல் பாடம் என்பது காலத்தின் கட்டாயம் இதனை உணர்ந்து பல மாநிலங்களுக்கு முன்னோடியாக கணினி அறிவியல் பாடத்தில் நன்கு கற்று தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த விளங்க வேண்டும் என்ற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
READ ALSO THIS: கணினி ஆசிரியர்கள் கோாிக்கை – மத்திய அரசு பதில் மனு
ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கலைஞர் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடமும் அதற்கான புத்தகங்களும் இன்றுவரை 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது அவர் கொண்டு வந்த உயரிய பாடத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கலைஞர் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடமும் அதற்கான புத்தகங்களும் இன்றுவரை 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது அவர் கொண்டு வந்த உயரிய பாடத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடம்:
தமிழக கலைத்திட்டத்தில் ஐந்து பாடம் என்ற நிலையை மாற்றி ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவந்தார் இன்று பல மாநிலங்கள் இதனை பிரதான பாடங்களாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர் இந்த பெருமை எல்லாம் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு மட்டுமே!
மாண்புமிகு கலைஞர் அவர்கள் மாற்ற நினைத்த தமிழக அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடம் என்ற நிலை தற்போதைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே நடைமுறைப்படுத்தி கலைஞரின் கனவுக் கல்வியான கணினி கல்வியை அரசு பள்ளிகளுக்கு கொண்டுவந்து அரசு பள்ளியை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக கொண்டுவருமாறு இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைகணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் உருவாக்கித் தந்தவர் மாண்புமிகு கலைஞர் நம் இதயத்தை விட்டு நீங்கா இடத்தில் இருக்கிறார் . மாண்புமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று அரசுப்பள்ளி காண கணினி அறிவியல் நாளாக நாம்அனைவரும் கொண்டாடுவோம். அரசு பள்ளியை தலைநிமிரச் செய்வோம், என்று இவ்வாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |