You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Tamil Nadu State Child Policy in Tamil |தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை

Tamil Nadu State Child Policy in Tamil||

Tamil Nadu State Child Policy in Tamil| தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை

Tamil Nadu State Child Policy in Tamil

தமிழ்நாடு அரசு மாநில குழந்தைகளுக்கான கொள்கை குறித்து அதன் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஒவ்வொரு விஷயங்கள் குறித்து தொடர்ந்து குழந்தைகள் நலன் பிரிவில் நாம் பார்க்கலாம்.

தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் நம் மாநிலம் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்பதை தமிழ்நாடு புள்ளி விவரங்கள் அட்டவணை தெளிவாக காட்டுகிறது.

எனினும், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து மீட்கப்பட்டவுடன் அந்தக் குழந்தைகளின் நிலை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற பல விடயங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.

Read Also : குழந்தைகள் வாழ்வு, உயிர்வாழ்தல், உடல்நலம், ஊட்டச்சத்து கொள்கை கோட்பாடுகள் என்ன?

மேலே கூறப்பட்ட விடயங்கள், அரசு, குழந்தைகளின் நலனோடு தொடர்புடைய அனைத்து தரப்பினர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் நலனை மதிப்பிடுவதற்கான குறியீடுகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டாலும், தடுக்கக்கூடிய மற்றும் தமிழக அரசின் கவனம் தேவைப்படும் சில பிரச்சனைகள் இங்கு உள்ளன.

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னை:

  • ஊட்டச்சத்துக் குறைபாடு
  • இரத்தசோகை
  • குழந்தைகள் இறப்பு விகிதம்
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம்
  • குழந்தைகள் பாலின விகிதம்
  • முழுநோய்த் தடுப்பு
  • உடல் எடை குறியீட்டெண்
  • உயர் மற்றும் மேல்நிலைக் கல்வி நிலைகளில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம்
  • திறந்தவெளியில் மலம் கழித்தல் போன்றவையாகும்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் நோக்கம்

தமிழ்நாட்டில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வுகாணவும், அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தனது கடமையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், அதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடையவும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021ஐ உருவாக்கியுள்ளது.

1974 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி, தனது குழந்தைகளே மாநிலத்தின் மிகமுக்கியமான சொத்து என்பதை தமிழக அரசு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மாநில வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள பத்தாண்டு கால இலக்குகளை அடைய, இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்துவதுடன், இந்தப் பிரச்சனைகளைத் தீவிரமாக தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் மாநில குழந்தைகளுக்கான கொள்கை, குழந்தைகளின் ஒட்டுமொத்த நலன்களை குறிப்பிடத்தகுந்த அளவில் மேம்படுத்தவும் குழந்தைகள் நிலை குறித்த குறியீடுகளில் சர்வதேசத்தரங்களுக்கு இணையான அளவுகோல்களை அமைக்கவும் உத்தேசித்துள்ளது.

தமிழக அரசின் மாநில குழந்தைகளுக்கான கொள்கை, வளரிளம் பருவத்தினரின் சுகாதாரம் மற்றும் அவர்களின் நிலை குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதோடு, மாநிலத்தின் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உள்ளடக்கியுள்ள மேலே (முந்தைய பத்திகளில்) குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவேண்டும் என்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. க

ுழந்தைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் அனைத்து அம்சங்களும் இந்தக் கொள்கையை வகுக்கும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதிகமான துன்பங்கள் நேரக்கூடிய மனிதாபிமானமற்ற சூழலில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த ஆவணம் வலியுறுத்துகிறது.

TN Policy Children 2021 -1
தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை
Tamil Nadu State Child Policy in Tamil
Tamil Nadu State Child Policy in Tamil