தமிழக பள்ளி கல்வித்துறையில் நான்கு இணை இயக்குனர் மாற்றப்பட்டுள்ளனர், இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட கடிதத்தில், தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் வகுப்பு – II சார்ந்த இணை இயக்குனர் மற்றும் அதனையொத்த பணயிடங்களில் பணிபுரியும் நான்கு இணை இயக்குனர்கள் நிர்வாக நலன் கருதி மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இணை இயக்குனர் (பயிற்சி) எஸ் உமா, மாநில திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனர்களாக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குனர் நா அருள்முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், இணை இயக்குனாக (பயிற்சி) மாற்றப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் உறுப்பினர், கே சசிகலா, தொடக்க கல்வி இயக்ககம் (உதவி பெறும் பள்ளிகள்) இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
தொடக்க கல்வி இயக்ககம் (உதவி பெறும் பள்ளிகள்) இணை இயக்குனர் ஆர் பாஸ்கரசேதுபதி, ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.
உடனடியாக ஒதுக்கப்பட்ட பதவியிடங்களுக்கு பணியில் சேர வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |