ஒவ்வொரு விளையாட்டுக்கும் பிரத்யேகமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன, கட்டணமின்றி பயிற்சி மையங்களில் நுழைவது எளிதல்ல, பண வசதி உள்ளவர்கள் மட்டுமே அங்கு பயற்சி பெற முடியும். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த அரசு தொடக்க பள்ளி ஆசிரியை கீதா என்பவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா சதுரங்க பயிற்சியை அளிக்க உள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்டத்தில் இந்த பயிற்சி அளிக்க முடியும் என்று கூறியுள்ளார். இந்த தகவல் படிக்கும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் தங்கள் பள்ளியில் படிக்கும் சதுரங்க விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை இந்த பயிற்சியில் பங்கு பெற வைத்து, விளையாட்டில் சிறந்தவர்களாக உருவாக்கலாம். ஆசிரியை கீதா அவர்களை geetha651970@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி பெயர், மாவட்டம், தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல்களுடன் தொடர்பு கொள்ளமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.