தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, கொரோனா பெருந்துதொற்று காரணமாக அரசு அறிவித்தபடி, தனியார் நடத்துட் கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்பட்டன. அவற்றில் பணியாற்றிவர்களுக்கு முழுச்சம்பளம் வழங்குமாறும் அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், மிகப் பெரும்பாலான தனியார் கல்வி நிலைய நிர்வாகங்களின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு உரிய ஊதியம் தரவில்லை என புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணங்களை அந்த நிறுவனங்கள் வசூலித்தே வருகின்றன.
எனவே தமிழ்நாடு அரசு தலையிட்டு, தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், பள்ளி கல்வித்துறை செயலாளரும், உயர் கல்வித்துறை செயலாளரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |