தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன் பணி நடந்து வரும் நிலையில், இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உடல் நலம் இயலாமை, நோய் பாதிப்பு ஆகியோர் மருத்துவ காரணங்களால் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரி விண்ணப்ப கடிதம் கொடுத்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர், தேர்தல் பணிக்கு முழுக்கு போடவும், வேண்டுமென்ற தேர்தல் பணியிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், புதுச்சோி துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த ஒரு ஷாக் கடிதத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி சட்டமன்ற தோ்தல் செம்மையாக நடத்த, அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சுமார் 5,759 வாக்கு சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தோ்தல் பணிக்காக ஆணை பெற்ற வாக்குசாவடி அதிகாரிகள் அலுவலர்கள் பல்வேறு மருத்துவ காரணங்கள் முன்வைத்து தங்களை தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு விண்ணப்பித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணி என்பது தவிர்க்க இயலாத முதன்மையாக கடமை என்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவ காரணங்கள் முன்வைத்து பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சுகாதாரத்துறையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மருத்தவ குழுவின் பரிசீலைனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மருத்துவ குழுவானது, விண்ணப்பத்தாரர்கள் கூறிய மருத்துவ காரணங்களால் பணி செய்ய இயலாது என்பது பரிந்துரைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பெயர்கள் கட்டாய பணி ஓய்வு அளிக்க அவர்களுகடைய துறைக்கு பரிந்துரைக்கப்படும். மேலும் மருத்துவகுழுவினரால், தேர்தல் பணியாற்ற தகுதியுடையவர்கள் என்று பரிந்துரைக்கப்படும் அலுவலர்களின் பெயர்கள், தவறான மருத்துவ காரணங்கள் கூறி, தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரியதற்காகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடைமைகளிலிருந்து தவறியவர்களாகவும் கருதப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |